இறைநம்பிக்கையாளர்களின் சில பண்புகள்: (ஸஹீஹ் முஸ்லிம் நூலிலிருந்து)
- Sep 30, 2016
- 1 min read

1. வெட்கம்
2. உணவளிப்பது
3. அறிமுகமானவருக்கும் அறிமுகம் அற்றவருக்கும் சலாம் சொல்வது
4. தன் நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் மற்ற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருப்பது
5. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மற்றெதையும் விட நேசத்திற்குரியோராய் இருப்பது
6. மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது
7. தமக்கு விரும்புவதையே 'தம் சகோதரருக்கும்' அல்லது தம் அண்டை வீட்டாருக்கும் விரும்புவது
8. நல்லதைப் பேசுவது; அல்லது வாய்மூடி இருப்பது
9. தம் அண்டை வீட்டாரை கண்ணியப்படுத்துவது
10. தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்துவது
11. தீமையைக் கண்டால் கரத்தால் தடுத்தல், முடியாவிட்டால் நாவால் தடுத்தல், அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தாலேனும் வெறுத்து ஒதுங்குவது
இப்பண்புகளை எம் வாழ்வில் முடியுமானவரை கடைபிடித்து, இறைநம்பிக்கையின் சுவையை அடைந்துகொள்வோம்.


Comments