top of page

EVER Ready or NEVER Ready

  • May 1, 2013
  • 1 min read

சுறுசுறுப்பின் எதிரி: முன்னேற்றத்தின் தடை: சோம்பல்!

சோம்பல் மிக்கவர்கள் படுக்கையைவிட்டு மட்டுமல்லாமல் உட்கார்ந்துவிட்டால் இருக்கையை விட்டும் எளிதாக எழுந்திருக்க மாட்டார்கள். சோம்பல் மிக்கவர்கள் தானும் சலித்துக்கொள்வார்கள்; மற்றவர்களையும் சலிப்பூட்டுவார்கள். அல்லாஹ் தன் திருமறையிலே பல இடங்களில் நயவஞ்சகர்களைப் பற்றி குறிப்பிடும் போதுஇ இந்த சோம்பலைப்பற்றியும் குறிப்பிடுகின்றான்.

சோம்பலைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள்:

1) அதிகாலையில் எழுந்து பஜருடைய தொழுகையை நிறைவேற்றுதல்

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘உங்களில் ஒருவர் உறங்கும் போது பிடரியில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போடுகிறான். ஒவ்வொரு முடிச்சின் போதும் இரவு இன்னும் இருக்கிறது; உறங்கு என்று கூறுகின்றான். அவர் அதிகாலையில் விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்கிறது. அவர் உளூச் செய்தால் இன்னொரு முடிச்சு அவிழ்கிறது. அவர் தொழுதால் மூன்றாவது முடிச்சும் அவிழ்கிறது. அவர் மகிழ்வுடனும் மன அமைதியுடனும் காலைப் பொழுதை அடைகிறார். இல்லையெனில் அமைதியற்றவராக, சோம்பல் நிறைந்தவராகக் காலைப் பொழுதை அடைகிறார்’ {அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), ஆதாரம் : புகாரி}

2) வயிறு புடைக்க சாப்பிடாதிருத்தல்

3) இரவில் தாமதமாக படுக்கைக்குச் செல்வதைத் தவிர்த்தல்

4) சோம்பலை விட்டும் நம்மை பாதுகாக்குமாறு அல்லாஹ்விடம் துஆச் செய்தல் (நபியவர்கள் தினமும் காலை, மாலை மற்றும் ஒவ்வொரு பர்ளான தொழுகைக்குப் பின்னும் அல்லாஹ்விடம் சோம்பலிலிருந்து பாதுகாப்புக்கோரினார்கள்)

நபியவர்கள் 'யா அல்லாஹ்! கவலை, துயரம், இயலாமை, சோம்பல், கஞ்சத்தனம், கோழைத்தனம், மனிதனின் ஆதிக்கம் மற்றும் கடனின் சுமை ஆகியவற்றைவிட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்' என்ற துஆவை தொழுகையில் ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள். (ஆதாரம் : புகாரி)

ஷைத்தானின் இத்தூண்டுதலிலிருந்து அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக.

நல்லவிடயங்களுக்கு,

சிலர் EVER Ready

சிலரோ NEVER Ready

 
 
 

Comments


join us

 for the 

PARTY

Recipe Exchange @ 9pm!

Read More About me
My Sponsers
Tag Cloud
Follow Me
  • Facebook Basic Black
  • Twitter Basic Black
  • Black Google+ Icon

© 2023 by My Weight Lost Journey. Proudly Created with Wix.com

bottom of page